மலையாள தேசத்தில் ஓணம் பண்டிகை களைகட்டத் துவங்கியுள்ளது.
கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களின் முக்கியமான திருவிழா ஓணம் என்பது அனைவரும் அறிந்ததே. மாகபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணத் திருவிழாவாகவும், கேரள புத்தாண்டாகவும் அம்மாநிலத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பத்து நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஓணத் திருவிழாவின் போது அதிகாலையிலே எழுந்து குளித்து வெண்ணிற ஆடை உடுத்து வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். மேலும், வீட்டின் முன்பு பூக்களினால் கோலங்கள் இட்டு, மன்னர் மகாபலியை ஆடிப்பாடி வரவேற்கின்றனர். முதல் நாள் அத்தம் என்றும், 2 ஆம் நாள் சித்ரா என்றும், 3 ஆம் நாளான சுவாதியில் ஒருவருக்கொருவர் பரிசுகளை கொடுத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர்.
4 ஆம் நாளான விசாகத்தில் 64 வகையான உணவுகள் பறிமாறுவர். அனிஷம் எனப்படும் 5 ஆம் நாளில் தான் கேரளாவின் பாரம்பரிய படகு போட்டி நடத்தப்படுகிறது. 6 ஆம் நாள் திருகோட்டை, 7 ஆம் நாள் மூலம், 8 ஆம் நாள் பூராடம், 9 ஆம் நாள் உத்திராடம், 10 ஆம் நாளான திருவோணத்தில் கோலகலமான கொண்டாட்டத்துடம் ஓணம் திருவிழா நிறைவடைகிறது.
ஓணம் பணிகையின் சிறப்பம்சமாக ஒவ்வெரு வீட்டின் வசலிலும் அத்தப்பூ கோலம் போடப்படும், பண்டிகையின் 10 ஆம் நாளில் 10 வகையான பூக்களால் அலங்காரம் செய்து மகிழ்கின்றனர். இதற்காகவே பல்வேறு வகையான பூக்களின் வியாபாரம் சந்தைகளில் அமோகமாக உள்ளது.
ஓணத்தின் மற்றொரு அம்சமாக விளங்குவது களி. களி என்பது மலையாளத்தில் நடனத்தை குறிப்பதாகும். அந்நாளில் புலிக்களி, சுவடுக்களி நடனம் ஆடி கொண்டாத்தில் ஈடுபடுகின்றனர். அதேபோல், மகாபலி மன்னனை வரவேற்று பாடும் கைகொட்டுகளி நடனத்தின் பெண்கள் இணைந்து ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
இதேபோல், யானை திருவிழாவும் ஓணத்தின் முக்கிய நிகழ்வாக அரங்கேறும். திருவோண தினத்தன்று தங்க கவசங்களால் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஊர்வலம் நடைபெறும். இந்த 10 நாட்களும் அனைவரும் சாதி மத பேதமின்றி கொண்டாடத்தில் ஈடுபட்டுகின்றனர் என்பதே இவ்விழாவின் சிறப்பை உணர்த்துகிறது
இந்தநிலையில், கேரள சமாஜம் அமைப்பின் சார்பில் ஈரோட்டில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேரள பாரம்பரிய உடையணிந்த பெண்கள் வாசலில் அத்தப்பூ கோலமிட்டும் கை கொட்டியும் நடனமாடி மகிழ்ந்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் கேரள மக்கள் இந்த ஓணம் பண்டிகையை மட்டும் கொண்டாட தவறுவதில்லை. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஓணத்திருவிழாவை புதுமண தம்பதிகள் தலை ஓணம் என மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இதேபோல், அறுவடை திருநாளாகவும் ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கடந்த வருடம் வெள்ள பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஓணத்தை இரு மடங்காக கொண்டாட கேரள மக்கள் தயாராகி வருகின்றனர்.