ஓமன் நாட்டுக்கு கிடைத்த பெருமை

சுற்றுலாவுக்கு உகந்த நாடுகள் பட்டியலில் ஓமன் நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.

2018-ம் ஆண்டுக்கான 12 துறைகளில் சிறந்து விளங்கும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அரபு நாடுகளில் ஒன்றான ஓமன், சுற்றுலாவுக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. மிகவும் பாதுகாப்பான நாடு என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு குறித்து 140 நாடுகளில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத நாடாக ஓமன் உள்ளது.

இதுமட்டுமல்லாமல், அரபு நாடுகளில் சிறந்த போலீஸ் சேவைக்கான பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

Exit mobile version