பயிற்சித் திருவினையாக்கும் 1: ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை மானா பட்டேல்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர், வீராங்கனைகளை குறித்த விவரங்ககளை தினமும் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், இப்போட்டியில் பங்கேற்கவுள்ள இந்தியாவின் முதல் நீச்சல் வீராங்கனை, மானா பட்டேல் குறித்து தற்போது காணலாம்…

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் 2000-வது ஆண்டு பிறந்தார், மானா பட்டோல். 7 வயது முதல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர், 13 வயதில் தேசிய போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். 2009-ல், தேசிய ஜூனியர் போட்டியில் 200 மீட்டர் BACKSTROKE-ல் 2 நிமிடங்கள் 23 புள்ளி 41 வினாடிகளில் நிறைவு செய்து, ஆசியப் போட்டியின் முந்தைய சாதனையான 2 நிமிடங்கள் 26 புள்ளி 41 வினாடிகளாக இருந்ததை முறியடித்தார்.

தேசிய நீச்சல் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மானா பட்டேல் பதக்கங்களை குவிக்க ஆரம்பித்தார். 2015 ஒலிம்பிக் GOLD QUEST-க்கும் அவர் தேர்வு செய்யப்பட்டார். 2016-ஆம் ஆண்டு அதிரடியாக பதக்கங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தினார். GUWAHATI-ல் நடைபெற்ற தெற்காசியப் போட்டியில், 6 பதங்கங்களை வென்று அசத்தினார். 4 x 100 m Freestyle Relay மற்றும் 4 x 100 m Medley Relay-ல் தலா ஒரு தங்கத்தை கைப்பற்றி அசத்தினார். 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் backstroke நீச்சல் போட்டியில் தலா ஒரு வெள்ளிப்பத்கத்தை வென்றார். மேலும், 50 மீட்டர் Freestyle-ல் ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதகங்கங்களை வென்று அனைவரது பார்வையையும் தன் பக்கம் திருப்பினார், மானா பட்டேல்.

இதனைத் தொடர்ந்து, காத்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசியப் போட்டியில் பதக்கங்களை கைப்பற்றினார். 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் backstroke பிரிவில் தலா ஒரு தங்கம் என இரு பதக்கங்களை வென்றதோடு, 200 மீட்டர் backstroke-ல் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினார்.

இன்னும் பல சாதனைகளைத் தொடர வேண்டும் என துடித்துக் கொண்டிருந்த வேளையில், இந்தியாவின் முதல் வீராங்கனையாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார், மானா பட்டேல்.

ஒலிம்பிக்கில் பங்கேற்பது மிகவும் பெருமையாக உள்ளது என குறிப்பிட்ட மானா பட்டேல், உலக அளவில் மிகச்சிறந்த வீராங்கனைகளோடு போட்டியிடுவது ரொம்பவே திரில்லிங்காக இருக்கிறது எனவும், அவர்களை சந்திக்க தான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version