வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் நாளை ஆந்திர மாநிலம் ஓங்கோல்-காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து மசூலிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மசூலிப்பட்டினம் கடற்கரையில், புயல், மழை காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே கடலோரங்களில் தங்கியிருக்கும் மீனவர்கள் அரசு அமைத்திருக்கும் முகாம்களுக்கு சென்று தங்க வேண்டும் என்றும், புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இளைஞர்கள் தாமாகவே முன் வரவேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டு கொண்டனர். எச்சரிக்கையை மீறி மீனவர்கள் கடலுக்கு செல்வதை தடுக்க ஆந்திர அரசு கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

Exit mobile version