40 ஆண்டுகள் பழமையான ஆயமரத்தை காப்பாற்றிய அதிகாரிகள்

கோயம்புத்தூரில் சாலை விரிவாக்கப்பணிகளின் போது, 40 ஆண்டுகள் பழமையான ஆயமரத்தை வெட்டாமல், வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வரை உள்ள 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சாலையோரம் இருந்த 40 ஆண்டுகள் பழமையான ஆயமரம் காப்பாற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் திட்டமிட்டனர்.

ஆயில் மரம் என்றும் அவில் மரம் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த ஆய மரத்தின் தாய்மண் மட்டும் ஒட்டியிருக்கும் வகையில் மரம் வெட்டப்பட்டு, கிரேன் மூலம் மாற்று இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் திட்டமிட்டபடி, மரம் மீண்டும் நடப்பட்டது.

மரத்தின் உயிருக்கு சேதமில்லாமல் செய்யப்பட்ட இந்த மாற்று நடவுப்பணி, சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது. இந்த ஆயமரம் தன் பட்டை மற்றும் தண்டுகளில் தாதுக்கள் மற்றும் உலோகங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version