தென்பெண்ணை ஆற்றில் 3-வது நாளாக மிதக்கும் நுரை: அதிகாரிகள் ஆய்வு

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் மூன்றாவது நாளாக மிதக்கும் நுரை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு இன்று நீர்வரத்து ஆயிரத்து 368 கனஅடியாக இருந்து வருகிறது. ஆயிரம் கன அடிகளை கடந்து வரும் தென்பெண்ணை ஆற்றில், கர்நாடக தனியார் தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை கலந்துவிடுவதால், அதிகப்படியான நுரை மிதந்தவாறு ஆற்றுல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக இருந்து வரும் நுரையை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்பதை பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென கெலவரப்பள்ளி நீர்தேக்க அணை சுற்றுப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version