நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்பும் நாசா

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க தரையிறங்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன. இந்நிலையில் 2024ம் ஆண்டுக்குள் தென் துருவத்தில் மனிதர்களை தரையிறக்கும் நெடிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்து செயல்பட்டு வருகிறது.

1968ம் ஆண்டிலிருந்து 1972 வரை 9 விண்கலங்களை நாசா நிலவுக்கு அனுப்பியுள்ளது. நாசாவின் இந்த தொடர்ச்சியான திட்டங்களில் இதுவரை 12 பேர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். 1972ஆம் ஆண்டுக்கு பிறகு நிலவு தொடர்பான ஆராய்ச்சியை உலக நாடுகள் கைவிட்டன. இந்நிலையில் இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து நிலவு தொடர்பான ஆராய்ச்சி மீண்டும் வேகமெடுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டிற்குள் நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை தரையிறக்கும் திட்டத்தை நாசா செயல்படுத்தி வருகிறது.  கிரேக்க புராணங்களில் வரும் பெண் கடவுளின் பெயரான ஆர்டிமிஸ் என இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. நாசாவின் திட்டப்படி தென் துருவத்தில் முதலில் விண்வெளி வீராங்கனையும் அதைத் தொடர்ந்து வீரர்களும் தரையிறங்கவுள்ளனர்.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் தங்களுடைய சர்வதேச கூட்டாளிகளான ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், கனடா விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நிலவில் குடியிருப்புகளை அமைத்து மனிதர்களை குடியமர்த்தும் திட்டத்தின் முன்னோட்டமாக ஆர்டிமிஸ் அமையவுள்ளது. மேலும் தனது செவ்வாய் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான ஆய்வு மையத்தையும் நிலவில் நாசா அமைக்கிறது.

ஆர்மிடிஸ் திட்டத்திற்காக ஓரியான் என்ற விண்கலம், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நாசாவால் அமைக்கப்பட்டு வரும் தகவல் தொடர்பு அமைப்பான லூனார் கேட் வே மற்றும் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் லேண்டர் உள்ளிட்டவை வடிவமைக்கக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு  சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்டிமிஸ் திட்டத்திற்காக பிரத்யேகமான உடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஓசிஎஸ் எஸ் என்ற வகை உடைகள் விண்கலத்தின் உள்ளே இருக்கும் போது பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் இந்த உடைகள் ஆபத்துக் காலத்தில் விண்கலத்திலிருந்து வெளியேறும் வீரர்களை எளிதில் அடையாளம் காண உதவும். இதேபோல் நிலவின் மேற்பகுதியில் அணிவதற்காக எக்ஸ்எஎம்யு என்ற மற்றொரு வகையான உடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நவீனமுறையில் முந்தைய உடைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக மூட்டுகளை எளிதில் சுழற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிலவுக்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் ஓரியன் ராக்கெட் நான்கு பாகங்களைக் கொண்டத். 4 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய வகையில் Crew என்ற பகுதி  வடிவமைக்கப்பட்டு அதனுடன் வெப்ப தடுப்பு இணைக்கப்பட்டுள்ளது.
சர்வீஸ் மாடுள் எனப்படும் இரண்டாவது பகுதியில் வெப்ப நிலையை பராமரிக்கும் அமைப்புகள் மற்றும் என்ஜின்கள் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர திட எரிபொருள் என்ஜின்கள், ராக்கெட்டுகளை மேல்நோக்கி எடுத்துச் செல்லக் கூடிய அமைப்புகள் பூஸ்டர்கள் இணைக்கப்பட்டு உலகின் சக்தி வாய்ந்த ராக்கெட்டாக உள்ளது. ஏவப்பட்ட 8 நிமிடங்களில் இந்த ஓரியன் ராக்கெட்டுகள் பூமியை விட்டு வெளியே சென்று விடும்.

அப்பல்லோ விண்கலம் நிலவில் தரையிறங்கியதைப்போல் அல்லாமல் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி நிலவில் ஓரியன் விண்கலம் தரையிறங்கும். இதேமுறையைத் தான் சந்திரயான் 2 விண்கலத்தை ஏவ இஸ்ரோ பயன்படுத்தியது. இந்த முறையால் செலவு குறைவதுடன் துல்லியமாக தரையிறங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version