இறந்த தாயின் உடலை தனி ஒருவனாய் தூக்கிக் சென்று அடக்கம் செய்த சிறுவன்

 

ஒடிசாவில் சாதியக்கொடுமையின் உச்சகட்டமாக இறந்த தாயின் உடலை அடக்கம் செய்ய யாரும் வராததால், 17 வயது சிறுவன் தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் ஜஹர்சுகாடா மாவட்டம் கர்பாஹால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி சின்ஹானியா. இவர் தண்ணீர் கொண்டு வரும் பொழுது வழுக்கி விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது 17 வயது மகன் சரோஜ், தாயின் உடலை அடக்கம் செய்ய இறுதி சடங்கிற்கு உதவி செய்யுமாறு கிராமத்தினரிடம் கேட்டுள்ளான்.

எனினும் ஜாதியை காரணம் காட்டி யாரும் உதவ முன்வராததால், தனி ஆளாக தாயின் உடலை துணியால் கட்டி சைக்கிளில் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளான். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஜஹார்சுகாடா மாவட்ட ஆட்சியர், உரிய விசாரணை நடத்திட காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

Exit mobile version