நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு!

நியூசிலாந்து நாட்டின் பிரதமாராக இருப்பவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். இவரின் லேபர் கட்சியானது கடந்த 2017ஆம் ஆண்டு வெற்றிபெற்று கூட்டணியின் மூலம் ஆட்சி அமைத்தது. இதன் மூலம் இவர் பிரதமர் பதவியில் அமர்ந்தார். மேலும் இவர் பதவியேற்ற போது இவரின் வயது 37 தான். அதன்பிறகு 3 ஆண்டுகளுக்கு பிறகு 2020ல் நடந்த தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தார். கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இவர் தற்போது தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஐந்தரை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இவர் தற்போது தன் பதவியை ராஜினாமா செய்திருப்பதை அவரது கட்சியினரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கொரோனா பரவல், பொருளாதார இழப்பு உள்ளிட்ட பல்வேறூ பிரச்சனைகளை இவரது அரசு சமாளித்து வந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அத்தனைக்கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் இத்தகைய அறிவிப்பை அவர் வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியினையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவராக கிறிஸ் ஹிப்கின்ஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆகவே, நியூசிலாந்தின் அடுத்த பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார்.

Exit mobile version