வெளிநாடுவாழ் இந்தியர்களின் தங்கும் காலமானது 2020ஆம் ஆண்டின் கொரோனாவிற்கு பிறகு 120 நாட்கள் மட்டுமே தங்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் அதற்கு முன்பாக வெளிநாடுவாழ் இந்தியர்களின் தங்கும் காலமானது 182 நாட்களாக இருந்தது. கொரோனா காரணமாக குறைக்கப்பட்ட இந்த நாட்களை கூட்டி வைக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தி.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியா வரும்போது அதிக நாட்கள் தங்குவதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மாறாக இந்தியாவுக்கு அதிக பலன்கள்தான் கிடைக்கும். அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட நமக்கு அதிக நேரம் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.