பிளஸ்-2 விடைத்தாள்களை தரவிறக்கம் செய்வதற்கான அறிவிப்பு

மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்காக விடைத் தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள், இன்று காலை முதல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மாணவ, மாணவியர் scan.tndge.in என்ற இணையதள முகவரியில் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து விடைத்தாள்கள் நகல்களை தரவிறக்கம் செய்ய வேண்டும். மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதே இணையதளத்தில் உள்ள மற்றொரு லிங்கில் இருந்து, அதற்கான விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை வரும் 10 ஆம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஒரு பாடத்திற்கு 505 ரூபாயும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305 ரூபாயும் மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இத்தகவலை அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

Exit mobile version