தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில், பருவமழை படிப்படியாக குறைந்து வருவதாகவும், இதனால் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version