செல்போன் உற்பத்தியில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நோக்கியா, தற்போது மீண்டும் புதிய தொழில்நுட்பத்துடன் களத்தில் இறங்க உள்ளது. நோக்கியாவின் 1100 உள்ளிட்ட செல்போன்களை, யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது.
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் அணைத்து வசதிகளுடன் உச்சத்தை தொட்டுள்ள நிலையில். இந்த தொழில்நுட்பங்கள் எல்லாம் இல்லாமல், மகிழ்ச்சியோடு செல்போன்களை பயன்படுத்திக் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. 2ஜி தொழில்நுட்பம், கீ பேட், ஸ்னேக் கேம், 2 இன்ச் டிஸ்ப்ளே, நீண்ட நேரம் நீடிக்கும் சார்ஜ் என்று மகிழ்ச்சியாகவே பயன்படுத்திக் கொண்டிருந்தது உலகம்.
பல செல்போன் நிறுவனங்கள் இருந்தாலும் நூற்றுக்கு 80 பேரின் கைகளிலும் தவழ்ந்து கொண்டிருந்தது நோக்கியா நிறுவனத்தின் செல்போன்கள் தான். 2000-மாவது ஆண்டில் பலரது விருப்பமாக இருந்தது நோக்கியா. பின்னாளில் 3ஜி அறிமுகமானதும் ஆரம்பித்த ஸ்மார்ட்போன் புரட்சியால் சரிவை சந்தித்தது நோக்கியா நிறுவனம்.
இந்தநிலையில், விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க, புதிய தொழில் நுட்பங்களுடன் குறைந்த விலையில், நோக்கியா 110, நோக்கியா 2720, நோக்கியா 800 என்ற மாடல்களை, களமிறக்க இருக்கிறது அந்த நிறுவனம்.
டிஸைனை பொறுத்து சிறிது சறுக்கினாலும், வாட்சப், ஃபேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். செல்ஃபோனில் கூகிள் அசிஸ்டண்ட் வாய்ஸ் கண்ட்ரோலை பயன்படுத்தி டைப் மற்றும் சர்ச் செய்துகொள்ளலாம். தேவைப்பட்டால் 4ஜி வைஃபை ஹாட்ஸ்பாட்டாக இந்த செல்போனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மூன்று வகை செல்ஃபோன்களும் டூயல் சிம்கார்டுகளை பயன்படுத்தும் வசதியைக் கொண்டது. இந்த மாதம் செல்போன்கள் படிப்படியாக விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. புதியதாக பல செல்போன்கள் வந்தாலும், பழசை மறக்காத பலர் நோக்கியாவுக்காக காத்திருக்கின்றனர்.