வேளாண் படிப்புகளைத் தொடங்க அரசின் தடையில்லாச் சான்றிதழ் கட்டாயம் – தமிழக அரசு திட்டவட்டம்

வேளாண் படிப்புகளைத் தொடங்க அரசின் தடையில்லா சான்றிதழைப் பெற வேண்டியது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வேளாண் படிப்புகளைத் தொடங்க தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வேளாண் படிப்புகளை தனியார் கல்லூரிகள் தொடங்க 110 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும் என்றும், இதனை பின்பற்றினால் தான் தடையில்லா சான்று வழங்க முடியும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் வேளாண் படிப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கை, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டு வழக்கை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Exit mobile version