அங்கீகாரம் இல்லாத மனைகளை மறுபதிவு செய்வதற்கு தடை இல்லை: ஐ.ஜி. சுற்றறிக்கை

2016 ஆம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத மனைகளை மறுபதிவு செய்வதற்கு தடை இல்லை என்று பதிவுத்துறை ஐ.ஜி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் விதித்த தடையை தொடர்ந்து கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட மனை பிரிவுகளை மட்டும் வரன்முறைப்படுத்தி பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என கடந்த ஆண்டு மே மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது வரை 5 லட்சம் வீட்டு மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளது. 11 லட்சம் வீட்டு மனைகள் வரன்முறைப்படுத்தாமல் இருப்பதால் அபராதத் தொகையுடன் வரன்முறைக் கட்டணம் வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 2016க்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத மனையை மறுபதிவு செய்ய தடை இல்லை என்று பதிவுத்துறை ஐ.ஜி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Exit mobile version