தமிழக-கேரளா எல்லையில் நிபா வைரஸ் சோதனை

தமிழக கேரளா எல்லையில் நிபா வைரஸ் சோதனைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தமிழக கேரளா எல்லையில் உள்ள சோதனை சாவடி பகுதியில் தமிழக சுகாதார துறையினர் சோதனைகள் நடத்தினர். கேரளாவில் இருந்து வரும் மாநில அரசு பேருந்து, பயணிகளை ஏற்றி வரும் ஜீப்புகள் உட்பட பல வாகனங்களில் சுகாதார துறையினர் மருந்து தெளிப்பான் மூலம் மருந்துகள் தெளித்தனர்.

வாகன ஓட்டிகளிடம் நிபா வைரஸ் குறித்து தெளிவாக எடுத்து கூறப்பட்டு அவர்களுக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் உள்ளதா என சோதனை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு நிபா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Exit mobile version