நீலகிரி மாவட்டத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பில், குன்னூர் ஆற்று நீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் பிரதான நீர் ஆதாரமாக உள்ள குன்னூர் ஆறு மாசடைந்துள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆற்றை சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 7 லட்ச ரூபாய் மதிப்பில் கம்பி வேலி அமைக்கப்பட்டு அதன் நிறைவு விழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, காவல் துணைக் கண்காணிப்பாளர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.