சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு தொடர்பாக கடலூரை சேர்ந்த காஜா மொய்தீன் என்பவரது வீட்டில்,என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மவாட்டம் நெய்வேலி, பட்டாம்பாக்கம், பரங்கிப்பேட்டை, புத்தூர் ஆகிய பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடலூரை சேர்ந்த காஜா மொய்தீன் என்பவரின் 4ஆவது மனைவியான இந்திராகாந்தி, நெய்வேலியில் உள்ள என்.எல்.சி மருத்துவமனையில் உதவி செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இன்று காலை திடீரென இந்திராகாந்தி வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், காஜா மொய்தீனின் மனைவி இந்திராகாந்தியிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் சென்னை கோயம்பேட்டில் உள்ள ராஜேஷ் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை தீவிர சோதனை நடத்தினர். சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தீவரவாதிக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்த புகாரில் ராஜேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.