நாசவேலைக்கு சதித்திட்டம்: என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையடுத்து 3 பேர் மீது வழக்கு

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் நடத்திய சோதனை முடிவில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சென்னை மண்ணடியில் உள்ள அசருல்லா என்ற அமைப்பின் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. மேலும் எழும்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம், நாகை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த 4 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 9 செல்போன்கள்,15 சிம் கார்டுகள்,7 மெமரி கார்டுகள், 3 மடிக்கணினிகள், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக சையத் புகாரி, ஹசன்அலி, முகமது யூசப்புதின் ஆகியோர் மீது 5-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்கள் 3 பேரும் இந்தியாவில் சதி வேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டியதாகவும், தீவிரவாத குழுவை உருவாக்க முயற்சி செய்ததாகவும் என்.ஐ.ஏ. குற்றம் சாட்டியுள்ளது

Exit mobile version