சென்னையில் வகாதத் இஸ்லாமிய அமைப்பின் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

சென்னையில் உள்ள வகாதத் இஸ்லாமிய அமைப்பின் அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மண்ணடியில் தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் மற்றோரு அமைப்பான வகாதத் இஸ்லாமிய அமைப்பின் அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை 7 மணியளவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கினர். சுமார் 7 பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டு உள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் புரசைவாக்கத்தில் உள்ள இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகியின் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version