இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தால் ஆடிபோயிருக்கும் திமுக!

விடியா திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுக்க அதிமுக ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலினை பதவி விலகச்சொல்லி பொதுமக்கள் கோஷமிட்டு இருப்பதால் விடியா அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

முதல்வர் ஸ்டாலினே பதவி விலகு..முதல்வர் ஸ்டாலினே பதவி விலகு. இன்று . தமிழ்நாடு முழுக்க இந்த முழக்கம் தான்… அதிமுகவின் நிர்வாகிகள் தலைமையில் ஒட்டுமொத்த மாநிலமுமே இன்று திமுகவிற்கு எதிரான தங்கள் மனநிலையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். கடந்த வாரம் சென்னையில், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று புகார் வாசித்த அதிமுக இன்று மாநிலம் முழுக்க தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.

கள்ளச்சாராய, விஷ சாராய மரணங்கள், பாலியல் வன்கொடுமைகள், ஊழல் முறைகேடுகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியவைகளை கண்டித்து அதிமுக முன்னெடுத்த இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டதால் திக்குமுக்காடி இருக்கிறது திமுக… ஒட்டுமொத்த மாநிலமுமே திமுக அரசுக்கு எதிரான மனநிலைக்கு வந்துவிட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த ஆர்ப்பாட்டம்.

ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் இவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்கும் ஒரே கட்சி என்ற சாதனையைப் படைத்திருக்கிறது விடியா அரசு… ஒருபுறம், அப்பாவி மக்களின் உயிர் காவு கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்க, நாடக முதல்வர் ஸ்டாலினோ, சிங்கப்பூர் , ஜப்பான் என்று வெக்கேஷன் சென்றிருக்கிறார்… ஆளும் அரசின் அமைச்சர் வீட்டிலேயே பல நாட்களாக வருமான வரித்துறை ரெய்டு நடந்துகொண்டிருக்கிறது.. இன்னும் சில நாட்களில், ஆட்சிக்கே பங்கம் வரலாம் என்றெல்லாம் ஆரூடம் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், நீரோ மன்னன் ஃபிடில் வாசிப்பதுபோல ஜாலியாக இருக்கும் முதல்வரை பதவிவிலகச்சொல்லாமல், ஆஹா ஓஹோ என்றா புகழ்வார்கள் மக்கள்?

ஊழல் குற்றச்சாட்டுகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கிய அமைச்சர்களை பாதுகாக்க கட்சிக்காரர்களை வைத்து, ப்ரஸ் மீட் கொடுப்பது.. அமைச்சர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அமைச்சர்களின் துறைகளை மாற்றி நாடகமாடுவது என்று, இதுவரை உறுப்படியாக எதையும் செய்யாமல், அப்படி என்னதான் செய்துகொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்?

மக்களுக்காக நல்லாட்சி செய்வதாக சொல்லிக் கொள்ளும் ஸ்டாலினின் தலைமையிலான திமுக, இதுவரை செய்ததெல்லாம் மக்களுக்கு விரோதமானது தான் என்பது அதிமுக முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு பொதுமக்கள் தந்துள்ள ஆதரவே சாட்சியா? தமிழகம் முழுவதும் அதிமுக நடத்திய மாபெரும் போராட்டத்தாலும் , போராட்டத்தில் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலினை பதவி விலகச்சொல்லி கோஷமிட்டதும் திமுக அரசுக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Exit mobile version