இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பொன்முடியால் மீண்டும் மீண்டும் தூக்கத்தைத் தொலைக்கிறாரா ஸ்டாலின்?

ஒரு மாநிலத்தின் முதல்வரையே இப்படி புலம்பவைத்து, மக்கள் மத்தியில் கம்ளைண்ட் செய்யும் அளவுக்கு நடந்துகொள்கிறார்கள் நம் அமைச்சர்கள்.. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அமைச்சர்கள் முதல் கடைக்கோடி திமுக நிர்வாகி வரை நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாய் ஏதாவது ஒரு பஞ்சாயத்தை கூட்டி விடுகிறார்கள்.

இந்த லிஸ்ட்டில் பர்ஸ்ட் ரேங்க் எடுத்திருப்பது “ஓசிபஸ்” புகழ், சர்ச்சை நாயகன் பொன்முடிதான்.. மேடையிலேயே சாதி சொல்லி பேசியது முதல் எனக்கு ஓட்டுப்போட்டு கிழிச்சீங்களா என்று மக்களை ஏசியது வரை ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியாகவே இருந்துவரும் இவர், சுடச்சுட இன்னொரு சர்ச்சையையும் கிளப்பிவிட்டிருக்கிறார்…

சமீபத்தில் ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழாவில் கலந்துகொண்ட பொன்முடி, தன் பொன்னான வாயால் உதிர்த்த முத்துக்கள் என்ன தெரியுமா? “ஒரு காலத்தில் மாணவர்களை வாத்தியார்கள் பிரம்பெடுத்து அடித்துவந்தநிலையில் தற்போது, வாத்தியார்களை பிரம்பு எடுத்து அடிக்கிற அளவுக்கு மாணவர்கள் மாறிப்போயிருக்கிறார்கள்…. இதையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் ஆசிரியர்கள் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும்” என்று பேசி, ஒட்டுமொத்த ஆசிரியர்களின் கடுங்கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்…

ஒரு பேராசிரியராக இருந்து அரசியல்வாதியான பொன்முடியே ஆசிரியர்களை அட்ஜட்ஸ்ட் செய்துகொள்ளச்சொல்வது என்னமாதிரியான மனநிலை? இப்படிப்பட்ட ஒருவரை உயர்கல்வித்துறை அமைச்சராகப் பெற்றது தமிழ்நாட்டின் சாபக்கேடு, வெட்கக்கேடு என்று கழுவிக்கழுவி ஊற்றிவருகின்றனர் ஆசிரியர் சங்கத்தினர்…

சில நாட்களுக்கு முன்னர்தான், ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்களுக்கான கூட்டத்தில் யாரும் பங்கேற்காமல் இருப்பது நல்லது என்றுபேசி சர்ச்சையில் சிக்கினார்.. ஏற்கனவே ஆசிரியர்கள் முதல் அரசு அலுவலர்கள் வரை எல்லாருமே விடியா அரசின்மீது கடுங்கொந்தளிப்பில் இருக்கும் சமயத்தில் மீண்டும் மீண்டும் தன்னிலை மறந்து அவர் பேசும் பொன்முடியில் வாயால்தான் திமுகவே அழியப்போகிறது… அட என்னடா இது ஸ்டாலினுக்கு வந்த கொடுமை என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்…

ஊழலை உடைத்துப்பேசிய பிடிஆரை துறைமாற்றிய ஸ்டாலின், கல்லெடுத்து எறிந்த அவடி நாசரை அமைச்சரவையில் இருந்து தூக்கிவீசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு தொடர்ந்து அவப்பெயரை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பொன்முடி மீது மட்டும் எந்த நடவடிக்கையுமே எடுக்காமல் இருக்க என்ன காரணம்?அமைச்சர் பொன்முடியின் வாய்க்கு பூட்டு போடுவது யார்? மீண்டும்மீண்டும் தன் தூக்கத்தைக் கெடுக்கும் பொன்முடியைப்பார்த்து பயப்படுகிறாரா ஸ்டாலின்? இல்லை அவரின் இந்த சர்ச்சைகள் எல்லாம் ஸ்டாலினின் காதுகளுக்கே செல்வதில்லையா?நிலைமை இப்படியே இருந்தால், எழப்போகும் ஒட்டுமொத்த மக்கள் எதிர்ப்பை ஸ்டாலின் எப்படி சமாளிக்கப்போகிறார்? என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் எழும் கேள்வியாக இருக்கிறது.

Exit mobile version