இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அமைச்சரவையில் இருந்து ஓரங்கட்டப்படும் பிடிஆர்!

பிடிஆர் பேசிய ஆடியோ வெளியான நிலையில் திமுக கதிகலங்கி இருக்கும் நிலையில், அமைச்சர் பிடி ஆர் ஓரங்கட்டப்பட்டு இருப்பதும், அமைச்சர் பதவியில் இருந்து விலகி அமெரிக்காவுக்கே செல்ல பிடிஆர் திட்டமிடுகிறாரா பிடிஆர் என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

தமிழகத்தை ஆளும் திமுக அரசும், திமுக தலைமையும் தற்போது கதிகலங்கி இருக்கிறது. எதற்காக திமுகவினர் அனைவரும் பதறிப்போய் இருக்கிறார்கள்?… காரணம் கரூர் கம்பெனியை பதம் பார்த்து இருக்கும் ஐ.டி ரெய்டுதான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்…ஆனால், அதுவும் இல்லை….அதற்கும் மேலே என்று சொல்கின்றனர் உடன்பிறப்புகள்…

பிடிஆரின் 30ஆயிரம் கோடி ஊழல் தொடர்பான ஆடியோ வெளியான நாள் முதல், ஒட்டுமொத்த திராவிட மாடலும் கழன்று தொங்கிக் கொண்டு இருக்கிறது….பிடிஆர் ஆடியோ வெளியானதன் தொடர்ச்சியாக, ஜி-ஸ்கொயர் ஐ.டி ரெய்டு, செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடந்த ஐடி ரெய்டு என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் பரபரத்துக்கிடக்கிறது.நிதியமைச்சரா இருந்த பிடிஆரை கீழே இறக்கி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக்கி ஒதுக்கி வைத்துவிட்டார் ஸ்டாலின்…

இது ஒருபுறமிருக்க அமைச்சர் செந்தில்பாலாஜி ரெய்டால் ஸ்டாலின் கலங்கிப்போய் இருக்க, இதுதான் சரியான நேரம் என்று களத்தில் குதித்திருக்கின்றனர் சீனியர் அமைச்சர்கள்.. செந்தில்பாலாஜியின் டாஸ்மாக் துறையையும், மின்சாரத்துறையையும் கைப்பற்ற காய்நகர்த்தி வருகிறார்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ. பெரியசாமி உள்ளிட்ட சீனியர்கள்… அதோடு நின்றுவிடவில்லை, எப்படியும் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் பயப்படுவார் என்பதை தெரிந்து, செந்தில் பாலாஜிக்கு கதர் துறையோ, தமிழ்வளர்ச்சித்துறையோ ஒதுக்கி அவரை டம்மி ஆக்கிவிடவேண்டும் என்று துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்..

அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் மிகப்பெரிய கம்பெனிகளில் பணியாற்றிய பிடிஆரோ, ஓட்டுமொத்த திமுகவுமே தன் மீது அதிருப்தியில் இருப்பதால் அட போங்கப்பா, நான் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிடறேன் என்று எண்ணிக்கொண்டிருப்பதாக ரகசியங்களை கசியவிட்டுள்ளனர் உபிக்கள்..

ஒட்டுமொத்த சீனியர்களின் கொந்தளிப்பை பெற்றுக்கொண்ட செந்தில்பாலாஜி மற்றும் திமுக தலைமையின் கோபத்திற்கு ஆளான பிடிஆர் ஆகியோரை ஓரம்கட்ட நினைக்கிறாரா ஸ்டாலின்? சீனியர்களின் உட்கட்சி அரசியலை எப்படி சமாளிக்கப்போகிறார் செந்தில்பாலாஜி? ஒருவேளை பிடிஆர் அமெரிக்காவிற்கே சென்றுவிட்டால், அவர் இடத்தை நிரப்பப்போகும் அந்த புது அமைச்சர் யார்? திமுகவில் நடக்கும் இந்த சதிராட்டங்கள் ஸ்டாலினை மேலும் தூங்கவிடாமல் செய்கிறதா? என பல்வேறு கேள்விகள் மக்கள் மன்றத்தில் எழுந்துள்ளது.

Exit mobile version