திருச்சி மாநகராட்சி சார்பில் கொள்ளிடக்கரையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரைச் சுத்திகரிக்க ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கொள்ளிடம் கரையில் ஆண்டவன் ஆசிரமம் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக கொள்ளிடக்கரையில் இரண்டு பெரிய தரைமட்டத் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த தரைமட்டத் தொட்டிகளில் பல அடுக்கு காற்று உலர்த்தி நிறுவப்படுகிறது. இந்த உலர்த்திகளில் குடிநீரில் உள்ள தாதுக்கலவைகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படும். அதன் பின்னர் பொதுமக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுத்திகரிப்பு நிலையத்தை 4 மாதங்களில் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்ட பிறகு கலங்கலற்ற குடிநீர் விநியோகிக்கப்படும் என்றார்.