நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க தேர்தல்: தலைவர், செயலாளர் தேர்வு

நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாங்கிலி என்பவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 4 ஆயிரத்து 792 வாக்குகளில், மூவாயிரத்து 811 வாக்குகள் பதிவாகின. இரண்டாயிரத்து 302 வாக்குகள் பெற்ற வாங்கிலி என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

செயலாளராக ரவி என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சீரங்கன் என்பவர் இரண்டாயிரத்து 400 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணை தலைவராக சுப்ரமணி, துணை செயலாளராக மயில் ஆனந்தன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Exit mobile version