ட்விட்டரில் நடிகர் ரஜினிகாந்தை கலாய்த்த நெட்டிசன்

தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தை நெட்டிசன் ஒருவர் கலாய்த்துள்ளார்.

கடந்த 14 ஆம் தேதி புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி. எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று என்று தலைவர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இந்திய விமான படை வீரர்கள் இன்று அதிகாலை பாகிஸ்தானிற்குள் அதிரடியாக நுழைத்து அங்கிருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது சரமரியாக குண்டு மழை பொழிய, சுமார் 300 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய இராணுவத்தின் இத்தகைய வீர செயலை புரிந்த இந்திய விமான படைக்கு பிரதமர் மோடி,மற்றும் மாநில முதலமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், எதிர்க்கட்சிகளும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவருமான ரஜினிகாந்த், தன் ட்விட்டர் வலைபக்கத்தில் இந்திய விமானப்படைக்கு வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். அதில், பிராவோ (Bravo) இந்தியா என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு சமூகவலை நெட்டிசன் ஒருவர், பிராவோ வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் தலைவரே என்று நக்கல் செய்துள்ளார். இது, தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version