’நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை காண திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்

அஜித் நடிப்பில் இன்று வெளியான முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார். நள்ளிரவு முதலே திரையரங்குகள் முன்பு குவிந்த அஜித் ரசிகர்கள், பிரமாண்ட பேனர்கள் வைத்து, பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் பட்டாசு, வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.

Exit mobile version