நிரவ் மோடி ஜாமீன் மனு மீது லண்டன் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மோசடி செய்ததாக வைர வியாபாரி நிரவ் மோடி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நிரவ் மோடி லண்டனுக்கு தப்பி சென்றுவிட்ட நிலையில், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரி இந்தியா விடுத்த வேண்டுகோளின்படி, சமீபத்தில் லண்டனில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடியை நாளை வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. விசாரணையில் பங்கேற்பதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் இணை இயக்குநர் அந்தஸ்திலான அதிகாரிகள் நேற்று லண்டனுக்கு புறப்பட்டு சென்றனர்.

நிரவ் மோடியின் மனைவி அமிக்கு எதிராக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகல் மற்றும் இதர ஆதாரங்களையும் அவர்கள் எடுத்து சென்றனர். லண்டனில் அவர்கள் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பின்போது, நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்களையும் அவர்கள் எடுத்துரைக்க உள்ளனர்.

Exit mobile version