அரியலூரில் காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூட வேண்டும்

அரியலூரில் கைவிடப்பட்ட கனிம சுரங்கங்களை மூடிவிட்டு பசுமை காடுகளை உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் 8-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகின்றது. இந்த ஆலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களான ஜிப்சம் மற்றும் சுண்ணாம்புக் கல் மாவட்டத்தின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டி எடுக்கப்படுகின்றது. சுண்ணாம்புக்கல் முழுவதுமாக எடுக்கப்பட்ட பிறகு கைவிடப்பட்ட சுரங்கங்களை உடனடியாக மூட வேண்டும் என்பது அரசின் விதி. ஆனால் சில சிமெண்ட் ஆலைகள் விதிகளுக்கு மாறாக காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

எனவே, அவற்றை உடனடியாக மூடிவிட்டு அங்கு அழகிய பசுமை காடுகள் அமைத்து சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version