இந்த வானமும்..அவளது சிரிப்பும்-காதலில் மூழ்கிய விக்கி

நயன்-விக்கி காதல் ஜோடியை பற்றி புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.நானும் ரவுடி தான் திரைப்படத்தில் தொடங்கிய இவர்களின் காதல் தற்போது திருமணம் வரை வந்து நிற்கிறது.இவர்களின் ஜோடியை பார்த்து பொறாமை படாதவர்களே இல்லை என்று கூட கூறலாம்.சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு நயனுடன் விக்கி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலானதை பார்த்தோம்.

இந்நிலையில் நாளை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் நியூ யார்க் சென்றுள்ளனர்.அங்கு இருவரும் வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரை சந்தித்து ஒன்றாக உணவு அருந்திய புகைப்படமும் வைரலானது.தற்போது நயனுடன் விக்கி எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை பதிவிட்டு ’இந்த வானமும்,அவளது சிரிப்பும்’ என கூறியுள்ளார்.

 

 

மேலும்,நாளை நயனின் பிறந்தநாளை முன்னிட்டு இவர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தினை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

 

Exit mobile version