5-வது முறையாக ஆட்சிமைக்க உரிமை கோரினார் நவீன் பட்நாயக்

ஒடிசாவில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் கணேஷி லாலிடம் முதலமைச்சர் நவீன் பட்நாயக் கடிதம் கொடுத்துள்ளார்.

ஒடிசாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி 5-வது முறையாக தொடர்ந்து வென்று சாதனை படைத்தது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் அந்தக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜக 23 தொகுதிகளிலும் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

இந்த நிலையில், முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆட்சியமைக்க கோரி ஆளுநர் கணேஷி லாலிடம் கடிதம் கொடுத்தார். ஒடிசா மாநில முதலமைச்சராக இரண்டாயிரத்தில் இருந்து இதுவரை பதவி வகித்துள்ளார். தற்போது, சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், வரும் 29 ம்தேதி 5-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

Exit mobile version