சேலத்தில் நவராத்திரியை முன்னிட்டு கொலு பொம்மைகள் கண்காட்சி

சேலம் பூம்புகார் விற்பனை மையத்தில் நவராத்திரி பண்டிகையை அலங்கரிக்கும் விதமாக கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கப்பட்டது.

இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ‘நவராத்திரி பண்டிகைக்காக தங்கள் வீடுகளில் பொம்மை கொலு வைப்பது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகைக்காக கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. குறிப்பாக சேலத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை மையத்தில் கொலு பொம்மை கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சி அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

Exit mobile version