தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாட்டம்!

இன்று நாடு முழுவதும் 13வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு தேசிய தேர்தல் ஆணையம் ஒருங்கிணைக்கும் வாக்காளர் தினத்திற்கான சிறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்பு பங்கெடுக்கிறார். கூடவே மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜுவும் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த ஆண்டிற்கான வாக்காளர் தினத்தின் கருப்பொருள் என்னெவென்றால் “வாக்களிப்பதைப் போல வேறொன்றுமில்லை, நான் நிச்சயம் வாக்களிப்பேன்” என்கிற தலைப்பில் இவ்விழா நடைபெற உள்ளது. இந்தக் கருப்பொருளானது, இந்திய மக்கள் அனைவருக்கும் வாக்குரிமையைப் பற்றின விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. 1950 ஜனவரி 25ஆம் நாளில் இந்தியத் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டு தன் செயல்பாட்டினைத் தொடர்ந்தது. அதனை நினைவுகூறும் விதமாக இந்தத் தினத்தை தேசிய வாக்காளர் தினமாக கொண்டாட வேண்டும் என்று 2011ஆம் ஆண்டிலிருந்த அன்றைய மத்திய அரசனாது அறிவிப்பாணை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வரை தேசிய வாக்காளர் தினமானது ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Exit mobile version