கோவை டவுண்ஹாலில் தேசிய கொடி தயாரிக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன!

இந்திய தேசியக் கொடியானது 1947ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய தேசியக் கொடியினை வடிவமைத்தவர் சுரையா தியாப்ஜி ஆவார். ஆனால் இவருக்கு முன்பு பிங்கலி வெங்கையா வடிவமைத்துள்ளார். அவர் வடிவமைத்தத் தேசியக் கொடியில் 24 ஆரங்களுக்கு பதிலாக ராட்டைச் சின்னம் அமைக்கப்பட்டிருந்தது.

நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கருநீல வண்ண நிறத்தில் அசோகச்சக்கரம்  அமைக்கப்பட்டிருக்கும். இந்தச் அசோகச்சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தைக் கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்.

நாளைய தினம் இந்தியாவின் குடியரசுதினமானது நாடுமுழுக்கக் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி இந்தியா முழுவதும் தேசியக் கொடியினைத் தயாரிக்கும் பணி மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோவை மாநகராட்சியின் டவுண்ஹால் பகுதியில் தேசியக்கொடியின் தயாரிப்புப் பணியானது வேகமெடுத்துள்ளது.

Exit mobile version