படம் பார்க்க ரூ.75 மட்டும் போதும்…! தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு மல்டிபிளக்ஸ் சங்கம் அதிரடி ஆஃபர்!

national cinema day

வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் நாடு முழுவதும் 75 ரூபாய் மட்டும் டிக்கெட் கட்டணம் வசூலிக்க இந்திய மல்டிபிளக்ஸ் சங்கம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள PVR, INOX, Cinepolis உள்ளிட்ட அனைத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் டிக்கெட் கட்டணமாக செப்டம்பர் 16-ஆம் தேதி 75 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் நேரடியாக சென்று டிக்கெட் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், வேறு நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்தால் சற்று அதிக கட்டணம் செலுத்த நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version