நரிக்குறவர் சமூத்தினரிடம் தீண்டாமை காட்டிய ரோகிணி திரையரங்கம்.. மனித உரிமை ஆணையம் விசாரணை..!

சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் திரைப்படம் பார்க்க பணம் கொடுத்து டிக்கெட் எடுத்தும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அனுமதிக்காமல் தீண்டாமையில் ஈடுபட்ட ரோகிணி திரையரங்க நிர்வாகிகளுக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் திரையரங்க நிர்வாகத்தினர் மதுரவாயல் காவல்துறை உதவி ஆணையாளர் ரமேஷ் பாபு முன்னிலையில் ஆஜராகி அது குறித்து விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரோகிணி திரையரங்கில் டிக்கெட் எடுத்து பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தை இழிவு படுத்திய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பேரிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொள்ள ஆயத்தமாகியுள்ளது.

Exit mobile version