நாகூர் தர்காவின் 462வது ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று சந்தனக்கூட்டின் மீது பூக்களைத் தூவி வழிபட்டனர்.நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 462வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தாபூத் எனப்படும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகையிலிருந்து துவங்கியது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, நாகையின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. வழிநெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சந்தனக்கூட்டின் மீது பூக்களை தூவியும் பல்வேறு வடிவில் வந்த மினாராக்களை கண்டும் மகிழ்ந்தனர்.
இரவு முழுவதும் நடைபெற்ற இந்த ஊர்வலம் அதிகாலையில் நிறைவுற்றது. இதையடுத்து இன்று நாகூர் ஆண்டவர் சமாதியில் நடைபெறும் சந்தனம் பூசும் வைபவத்திலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.