முத்துராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா

முத்துராமலிங்க தேவரின் 112-வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மரியாதை செலுத்தவுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில், 30ம் தேதி காலை 9 மணியளவில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், அதிமுக உறுப்பினர்களும் பெருந்திரளாக வருகை தந்து, முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Exit mobile version