முத்தலாக் விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும்

உத்தர பிரதேச மாநிலத்தில், முத்தலாக் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

முத்தலாக் விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண்களுடன் கலந்து உரையாடிய யோகி ஆதித்யநாத், அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறினார். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் வரை நிதியுதவி தொடரும் என அவர் தெரிவித்தார்.

Exit mobile version