பசுமைப் புரட்சியை மீண்டும் உருவாக்கி வேளாண் உற்பத்தியை இருமடங்காக்க சீரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.
திருச்சி தனியார் மருத்துவ கல்லுரியில் 9 நாட்கள் இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இந்நிகழ்வை வேளாண் வல்லுநர் சுபாஷ் பாலேக்கர் பயிற்சி அளிக்கிறார். அதில் இயற்கை வேளாண்மை பயிற்சியில் அனைத்துப் பயிர்களின் சாகுபடி முறைகள், இயற்கை இடுபொருள் தயாரிப்பு, நாட்டு மாடுகளின் அவசியம் குறித்து பயிற்றுவிக்கப்படவுள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 3000 விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது பேசிய அமைச்சர் துரைக்கண்ணு தமிழ்நாட்டில் இரண்டாம் பசுமைப் புரட்சியை உருவாக்கி வேளாண் உற்பத்தியை இரு மடங்காக்க சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்தார்.