முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

திருநெல்வேலியில், முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர், மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு ஆதரவாக பெற்றோரும், இஸ்லாமிய அமைப்புகளும் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வரும் நிலையில், பள்ளியின் தாளாளர் குதுபுன் நஜீப், பனிரெண்டாம் வகுப்பு பயிலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவிகள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த பெற்றோர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்று திரண்டு, போராட்டம் நடத்தும் மாணவிகளுக்கு ஆதரவாக, பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, தாளாளர் குதுபுன் நஜீப் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விரைவில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.YouTube video player

Exit mobile version