சேலத்தில் 145 அடி உயரத்தில் அமைக்கப்படும் முருகன் சிலைக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள 140 அடி உயர முருகன் சிலையை விட, பிரம்மாணடமாக புத்திரக்கவுண்டம் பாளையத்தில் இந்த சிலை அமைக்கப்படுகிறது. 126 அடி பீடத்துடன் சேர்த்து அமைக்கப்படும் சிலைக்கான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைய உள்ள இந்த சிலைக்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.