ராசிபுரத்தில் நாய்கள் தொல்லை – தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்

ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த 3 மாதத்தில் மட்டும் 1,000-கும் மேற்பட்டோர் நாய்கடியால் சிகிச்சைபெற்று வந்ததையடுத்து நாய்களை பிடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சி.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கடித்ததில் 15-க்கும் மேற்பட்டோர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனையடுத்து, தெருக்களில் சுற்றிதிரியும் நாய்களைப் பிடிக்கக்கோரி ராசிபுரம் நகராட்சிக்கு புகார்கள் குவிந்தவண்ணம் இருந்தன.

அதனைத் தொடர்ந்து, ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகராட்சிப் பணியாளர்களால், இன்றுமட்டும் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட நாய்களுக்கு, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வேறு இடத்தில் விடப்படும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version