மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ்

நிலுவை வைத்துள்ள 5 கோடியே 80 லட்சம் சொத்து வரியை செலுத்தக் கோரி, மேட்டூர் அனல்மின் நிலைய நிர்வாகத்திற்கு பி.என்.பட்டி பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த பி.என்.பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 1,733 ஏக்கர் பரப்பளவில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 1984-ம் ஆண்டு முதல் மின் உற்பத்தியை துவங்கிய அனல் மின் நிலையம், ஆண்டுதோறும் பி.என்.பட்டி பேரூராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும். ஆனால் கடந்த 23 ஆண்டுகளாக அனல் மின் நிலைய நிர்வாகம் சொத்து வரியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது.

இதுகுறித்து அனல் மின் நிலைய நிர்வாகத்திற்கு பி.என்.பட்டி பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிலுவையில் உள்ள 5 கோடியே 80 லட்சம் ரூபாயை செலுத்தத் தவறும் பட்சத்தில் அனல் மின் நிலைய சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பி.என்.பட்டி பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Exit mobile version