சென்னையில் மகன் தாக்கப்பட்டதை தட்டிகேட்ட தாயை அரிவாளால் வெட்டிய மூன்று பேர் கைது!

கொளத்தூர் மகாத்மா காந்தி நகர் ஒன்றாவது தெருவை சேர்ந்த தீனா என்பவர் நண்பர்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் தீனாவை சரமாரியாக தாக்கியதுடன், அதனைதட்டிகேட்ட அவரது தாய் வனிதாவையும் மர்ம நபர்கள் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன், விக்னேஷ், சின்னா ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர். முதலமைச்சரின் சொந்த தொகுதியில் நடைபெறும் இது போன்ற குற்றச் செயல்களால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

YouTube video player

Exit mobile version