குஜராத்தில் சராசரியை விட அதிக அளவு மழை பெய்துள்ளதால் ராஜ்கோட்டில் அடுத்த ஓராண்டுக்குத் தேவையான தண்ணீர் அணைகளில் இருப்பு உள்ளது.
குஜராத்தில் ராஜ்கோட் நகரம் நாட்டிலேயே அதிகளவு வெப்பம் பதிவாகும் நகரங்களில் ஒன்றாகும். இங்கு பருவமழைக் காலம் தவிர மற்ற காலங்களில் கடும் வறட்சியும் குடிநீர்த் தட்டுப்பாடும் நிலவும். இந்தநிலையில் குஜராத்தில் இந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகமாகப் பெய்துள்ளது.
இதனால் ராஜ்கோட் நகரின் அருகில் உள்ள அஜி அணை, நியாரி அணை, பாதர் அணை ஆகியவை நிரம்பி வழிகின்றன. இவற்றில் ராஜ்கோட் நகருக்கு ஓராண்டுக்குத் தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.