கயிறு தயாரிப்பில் நல்ல லாபம் கிடைப்பதாக, பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த தாமரைக்குளம் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேங்காய் நாரிலிருந்து, கயிறு உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இத்தொழிலை குடும்ப உறுப்பினர்களே சேர்ந்து செய்வதால் நல்ல லாபம் கிடைப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கு தயாராகும் கயிறுகள் தரம் வாய்ந்தவையாக இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வந்து வியாபாரிகள் நல்ல விலைக்கு வாங்கி செல்கின்றனர்.