தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று வழக்கத்தை விட கூடுதலாக ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மஹாவீர் ஜெயந்தி, தேர்தல் நாள், புனித வெள்ளி என தொடர்ந்து 5 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால், கூட்ட நெரிசலைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து கழகங்கள் சார்பில் வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்னையில் இருந்து நேற்று 850 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் இன்றும் தமிழகம் முழுவதும் ஆயிரத்து 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.