அமமுக-வைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில்  அமமுக-வைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள்   துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்  முன்னிலையில்  அதிமுகவில் இணைந்தனர். அவர்கள் அனைவரையும் சால்வை அணிவித்து வரவேற்ற துணை முதல்வர், தொடர்ந்து கழகப் பணியாற்ற வாழ்த்து தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும் துணை முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களையும் துணை முதல்வர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

Exit mobile version