போப் ஆண்டவர் 6ம் பாலுக்கு நாளை புனிதர் பட்டம்

கருக்கலைப்பு உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்த போப் ஆண்டவர் 6ம் பாலுக்கு நாளை புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.

கத்தோலிக்க திருச்சபையின் 262வது போப் ஆண்டவராக பதவி வகித்தவர் 6-ம் பால். கத்தோலிக்க திருச்சபையின் வழிபாடு உள்ளிட்டவற்றில் சீர்திருத்தங்களை கொண்டு வந்த அவர், திருச்சபை வழிபாடுகளில் தாய்மொழியை அறிமுகப்படுத்தினார்.

சமூக நலனில் பெரிதும் அக்கரை கொண்டவராக திகழ்ந்த போப் பால், 1978 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6ஆம் தேதி காலமானார். 2012ம் ஆண்டு போப் பெனடிக்டால் வணக்கத்திற்கு உரியவராக அவர் கவுரவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், மக்களுக்காக சேவையாற்றிய போப் ஆண்டவர் 6ம் பாலுக்கு கத்தோலிக்க திருச்சபையால் நாளை புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளது. வாடிகனில் நடைபெறவுள்ள விழாவில் போப் பிரான்சிஸ் அவருக்கு புனிதர் பட்டத்தை வழங்குகிறார்.

Exit mobile version